Tamil news Sri Lanka

கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் l மதுபானசாலைகள் பூட்டு


கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து நடைமுறையொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்யாலங்கார விஹாரையின் மாநாயக்க தேரருமான வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டே, இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

அன்னாரது இறுதிக் கிரியைகள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தை நோக்கி பூதவுடல் கொண்டு வரப்படும் வீதிகளிலேயே, இந்த திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்கம் இன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகளை இன்று பூட்டுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

மத்திய மாகாணத்தை அதிர வைத்துள்ள அறிக்கை! 8 மாதங்களில் 11 பெண்கள் கொலை, 94 சிறுவர் துஷ்பிரயோகம்

Rohan

கொவிட் பரவல் குறித்து இராணுவ தளபதி வெளியிடும் அச்சம்

Rohan

ஆப்கானிஸ்தான் இராணுவ வைத்தியசாலை மீது இரு குண்டுத் தாக்குதல்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy