Tamil news Sri Lanka

கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.அ

இதேவேளை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கலாம் என்ற சுகாதார வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வகுப்புகள் ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Related posts

மஹேல ஜயவர்தனவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் புதிய பதவி

Rohan

2022ல் புது மாற்றத்துடன் WHATSAPP – Trueceylon News (Tamil)

Rohan

எவ்வித மாற்றமும் இல்லை – ஜனாதிபதி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy