Tamil news Sri Lanka

திடீரென மிக குறைந்த விலையில் நாட்டரிசி – எங்கே கொள்வனவு செய்ய முடியும்?


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 98 ரூபாவிற்கு வழங்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள சதொச மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 98 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நபரொருவருக்கு ஒரு தடவையில் மூன்று கிலோகிராம் நாட்டரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறுகின்றது.

சதொசவின் ஊடாக குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்து, வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதனை தவிர்க்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த அரிசியை கூட்டுறவு நிலையங்களின் ஊடாகவும் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சு மேலும் கூறுகின்றது. (TrueCeylon)

 



Source link

Related posts

BREAKING NEWS :- நாட்டின் பல பகுதிகளில் மின்தடை – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS : பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவுகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது

Rohan

BREAKING NEWS:- நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் வெட்டு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy