Tamil news Sri Lanka

மீண்டும் அதிகரிக்கும் மரணங்கள்! சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை


நாட்டில் நேற்று 29 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 8 முதல் 9 நாட்களாக தினசரி கொரோனா இறப்புகள் 20 க்கும் கீழே பதிவாகி இருந்தன.

எனினும், கடந்த சில தினங்களாக இறப்புகள் சற்று அதிகரித்து வருகின்றமை சுகாதார அதிகாரிகளிடையே சில கவலைகளை எழுப்பியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையே அதிக உயிரிழப்புக்கு காரணமா என சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நேற்றைய இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் திடீரென அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.



Source link

Related posts

அநுராதபுரம் சிறைக்கு சென்ற TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் (PHOTOS)

Rohan

தாய்லாந்து தமிழ் சங்கம் l மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் மற்றும் கொடைநாள் விழா (PHOTOS)

Rohan

BREAKING NEWS:- உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy