Tamil news Sri Lanka

குளியாப்பிட்டியில் புதிய கொரோனா கொத்தணி? அதிர்ச்சி தகவல்


குளியாப்பிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் தோன்றும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டி – எலத்தலவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் அப்பகுதியில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவத்துடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், நாட்டில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

BREAKING NEWS :- சற்று முன்னர், 43 நாட்களின் பின் திறக்கப்பட்டது நாடு

Rohan

பெண் கைதிகளுக்கு தொலைபேசி, தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த வைத்தியர்

Rohan

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து மூடப்படுகின்றதா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy