Tamil news Sri Lanka

பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு இனி தேவையில்லை – அமைச்சர் அதிரடி


இன்று முதல் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் அதிகாரிகளை பணிக்கமர்த்த அவசியமில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறினார்.

ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த ஆசிரியர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அத்தகைய நடவடிக்கை இனி அவசியமில்லை என்று அமைச்சர் கூறினார்.

மேலும், ஆசிரியர் அதிபர்கள் குழுவை “கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம்” என தொலைபேசியில் அச்சுறுத்தியவர்களுக்கு பொலிஸார்கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.



Source link

Related posts

“இலங்கையில் நாளாந்தம் 10−15 பாலியல் துஷ்பிரயோகங்கள்”

Rohan

மரக்கறிக்காகவும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்

Rohan

24 மணிநேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy