Tamil news Sri Lanka

நோயாளியின் உணவில் பல்லி! அதிரடியாக சீல் வைப்பு


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் இன்றைய தினம் போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலையினை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவினை விடுத்தார்.



Source link

Related posts

பொலிஸ் சிறைகூடத்தில் உயிரிழந்த இளைஞன் l பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்த பிரதேச மக்கள்

Rohan

கிளிநொச்சியில் 11 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Rohan

காணாமல் போனோர் விவகாரம் l தீர்வை வழங்க ஜனாதிபதி முயற்சி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy