Tamil news Sri Lanka

நாட்டில் எரிபொருள் தட்டுபாடு காணப்படுகின்றதா? – Trueceylon News (Tamil)


நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறித்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் எரிபொருள் தட்டுபாடு வருமாயின், அதற்கு முன்னரே தான் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறே கூறிய போதிலும், எரிபொருள் தட்டுபாடு ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பயன்பாட்டிற்கு போதுமான அளவு எரிபொருள் உள்ளதாக கூறிய அமைச்சர் உதய கம்மன்பில, தேவையற்ற விதத்தில் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் கோரியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- பயணப் பையில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

Rohan

விசாரணைக்குமாறு சட்ட மாஅதிபர் கோரிக்கை – Trueceylon News (Tamil)

Rohan

“omicron” திரிபு தொடர்பில் இலங்கை மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy