Tamil news Sri Lanka

ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்ற முக்கிய நபரின் இராஜினாமா கடிதம்?


அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தனது இராஜினாமாவை அறிவித்ததாக கூறப்படுகிறது.

வைத்தியர் பிரசன்ன குணசேன ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும், அவரது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

உடல்நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடியும் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுகாதார அமைச்சருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

தோட்ட அதிகாரியின் அராஜகத்தை கண்டித்து மக்கள் கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டம் (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

சபைக்குள் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் – Trueceylon News (Tamil)

Rohan

பெண்களுக்கான கல்வி குறித்து தலிபான்களின் நிலைபாடு மீண்டும் வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy