Tamil news Sri Lanka

மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவை? l இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட பதில்


மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை ஆரம்பிக்கும் திட்டம் மேலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், குறிப்பிட்ட சில பஸ்களை மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடுத்த தாம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்காக, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களில், பயணிகளிடமிருந்து பெருந்தொகை பணம் அறவிடப்பட்டு, மாகாணங்களுக்கு இடையில் அழைத்து செல்வதாக முன்வைக்கப்பட்ட முறைபாடு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சு அனுமதி வழங்காமையினால், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை ஆரம்பிக்க முடியவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

இதேவேளை, ரயில் சேவையை ஆரம்பிக்கின்றமை குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

Whatsapp எதிர்வரும் தினங்களில் மாறும் விதம்

Rohan

மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் மக்கள் l ஏன் இந்த நிலைமை? (PHOTOS)

Rohan

தலைசுற்ற வைக்கு போஞ்சி, தக்காளி மற்றும் கறி மிளகாயின் விலை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy