Tamil news Sri Lanka

பிரித்தானியா செல்லும் கோட்டா! சந்திக்க மறுக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தமிழன் செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதிவரை உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்து க்ளெஸ்கொவ் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விடுத்த அழைப்பினையேற்று ஜனாதிபதி செல்லவுள்ளார்.

ஜனாதிபதி அங்கு தங்கியிருக்கும் நாட்களில் கடந்த காலங்களில் அரசுடன் நெருங்கிச் செயற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் சந்திப்பொன்றை நடத்த ஜனாதிபதி தரப்பு ஏற்பாடுகளை செய்தது.

ஆனால் அந்த தமிழ் அமைப்புகள் அதற்கு உடன்படவில்லையென தமிழன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினை தீர்வு குறித்து இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பூர்வாங்க பேச்சுக்களை நடத்தாமல், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென மேற்படி அமைப்புகள் ஜனாதிபதி தரப்பிடம் சுட்டிக்காட்டியிருப்பதாக அறியமுடிந்தது.



Source link

Related posts

வெளியானது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

இன்று (01) முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

Rohan

ரோஹித்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை ஆக்கிரமிக்கின்றாரா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy