Tamil news Sri Lanka

இலங்கை அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி – Trueceylon News (Tamil)


இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய வெற்றியின் மூலம், இலங்கை அணி 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

இதன்மூலம் இலங்கை அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

 நேற்றைய 8 ஆவது முதல் சுற்று போட்டியில் இலங்கை – அயர்லாந்து அணிகள் அபுதாபியில் மோதின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து 18.3 ஒவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன்படி இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. (TrueCeylon)



Source link

Related posts

22 பேரை பலியெடுத்தது இயற்கை (முழு விபரம் இணைப்பு)

Rohan

இளைஞர்களை அமானுஷ்யமாக தாக்கும் பொலிஸார் l பொலிஸாருக்கு எதிராக அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை (VIDEO)

Rohan

டிசம்பர் மாதம் இலங்கையர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருக்கின்றது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy