Tamil news Sri Lanka

6 மாதங்களின் பின்னர், ஆசிரியர்கள் இன்றி இன்று (21) வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி


6 மாதங்களின் பின்னர், கல்வி நடவடிக்கைகள் இன்று (21) முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, இன்று முதல் 4 கட்டங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இதன்படி, முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.

இதேவேளை, சம்பள முரண்பாட்டு பிரச்சினை போராட்டம் காரணமாக, இன்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதிபர்−ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 25ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அந்த முன்னணி அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

ஹிஷாலினி உயிரிழந்த வழக்கிலிருந்து தப்பினாரா ரிஷாட்டின் மனைவி? வெளியான புதிய செய்தி

Rohan

கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு l பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு இடையூறு

Rohan

48 மணித்தியாலங்களில் கேஸ் விலையை குறைக்கக்கூடிய ஒரே தலைவர்? – முன்னாள் அமைச்சர் கூறும் கருத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy