Tamil news Sri Lanka

மனிதர்களை உணவாக உட்கொள்ளும் ஆபத்தான மீன் இனம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது!!


மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் மீன் வளர்ப்பு பிரிவின் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தியவன்னா ஓயா,களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் இந்த ஆபத்தான மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கு மீன் குஞ்சிகள் விடப்பட்டபோது இந்த வகை இனத்தைச் சேர்ந்த மீன் கலந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விற்பனைக்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் ஊடாக இந்த அபாய மீன்கள் இலங்கைக்குள் வந்திருக்கலாம் என்றும், அல்லது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது குறித்த மீன்கள் வந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?

Rohan

NEWS JUST IN :- பொது போக்குவரத்து தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பு

Rohan

கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy