Tamil news Sri Lanka

நுவரெலியாவிற்கு வருபவர்களை திருப்பி அனுப்பவும் – அதிரடி உத்தரவு


வேறு மாகாணங்களிலிருந்து நுவரெலியாவுக்கு வருகை தருவோரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு நுவரெலியா பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதமும் உயிரிழப்பு வீதமும் குறைவடைந்து வரும் இவ் வேளையில் வெளிமாகாணங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் மூலம் மீண்டும் தொற்று அதிகரிக்கலாம்.

ஆகையால் வெளி மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முறைகளில் நுவரெலியாவுக்கு வருகை தருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இங்கு வருபவர்களை திருப்பி அனுப்பும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.



Source link

Related posts

பொது இடங்களில் கொவிட் அட்டை அவசியம் l அமைச்சர் வெளியிட்ட தகவல்

Rohan

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர் பதவிக்கு மஹேல ஜயவர்தன நியமனம்

Rohan

200 ரூபாவால் அதிகரிக்கும் பால்மா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy