Tamil news Sri Lanka

“ஃபேஸ்புக்” பெயரை மாற்றுவதற்கு மார்க் திட்டம்!


சமூக வலைத்தளங்களின் ராஜாவாக விளங்கக் கூடிய ஃபேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவை கூட ஃபேஸ்புக்கின் துணை நிறுவனங்களே.

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்யப்படும் எனவும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு மொபைல் ஆப்பில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற புரோடக்ட்கள் கிடைக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வரும் அக்டோபர் 28ம் திகதியன்று நடைபெறவிருக்கும் ஃபேஸ்புக்கின் வருடாந்திர கூட்டத்தில் மார்க் ஸக்கர்பர்க் இது குறித்து பேசக்கூடும் எனவும், ஆனால் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் கூட ஃபேஸ்புக்கின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் ஃபேஸ்புக் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தகவ்ல வெளியாகி உள்ளது.



Source link

Related posts

மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? l எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?

Rohan

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வது குறித்து இராணுவ தளபதி வெளியிட்ட கருத்து

Rohan

இன்று 150MM மழை பெய்யும் பிரதேசங்கள் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy