Tamil news Sri Lanka

போராடும் அதிபர்−ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்காதிருக்க ஒரு மாகாண ஆளுநர் தீர்மானம்


பாடசாலைகள் நாளைய தினம் (21) ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பணிப் பகிஷ்கரிப்புக்களில் ஈடுபடும் வடமேல் மாகாண ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்புள்ள நபர் என்ற விதத்தில், பாடசாலைகயளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதிபர்கள் ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க இடமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

கொரோனாவின் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர் சீனாவில் உயிருக்கு போராட்டம்

Rohan

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான மனு l நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Rohan

விசா செல்லுபடியாகும் காலம் இன்று முதல் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy