Tamil news Sri Lanka

IOC எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் l அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை


லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லங்கா IOC நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு, லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, எரிபொருளில் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது என அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவத் தளபதியின் அதிரடி அறிவிப்பு

Rohan

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மையான வரவு செலவுத்திட்டம்

Rohan

மலையக மக்களுக்கு பண உதவி வழங்கிய கொழும்பு அரசியல்வாதி (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy