Tamil news Sri Lanka

கொழும்பில் நடு வீதியில் பொலிஸாரை கத்தியால் வெட்டிய நபர் கைது


கொழும்பு − முகத்துவாரம் − எலிஹவுஸ் பார்க் பகுதியில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் பொலிஸாரினால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கடமைகளுக்காக சென்ற பொலிஸார் மீது நேற்றைய தினம் (15) சந்தேகநபர் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இருவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Rohan

அதிவேக வீதியில் விபத்து – கடுமையான வாகன நெரிசல்!

Rohan

200 ரூபாவால் அதிகரிக்கும் பால்மா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy