Tamil news Sri Lanka

இலங்கை அரசியலில் புதிய திருப்பம் – Trueceylon News (Tamil)


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பலவீனமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப 2015ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த அதிகாரத்தை கைவிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மீண்டும் தெரிவு செய்ய வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்காக பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு தேவையான நிலையான கொள்கையோடு புதிய வேலைத்திட்டத்தை வகுத்து அதன்படி பயணிக்க வேண்டியது அவசியம் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.



Source link

Related posts

விமான பயணிகளின் எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

Rohan

குறுகிய காலத்தில் இலங்கை படைத்துள்ள சாதனை! – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவராகின்றார் ஷரித் அசலங்க

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy