Tamil news Sri Lanka

ஆசிரியர்களுக்கு எதிராக மீண்டும் சட்ட நடவடிக்கையா?


அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு, பரிந்துரை செய்யப்பட்ட கொடுப்பனவில் மூன்றில் இரண்டு சம்பள கொடுப்பனவை அடுதத வருடம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து ஆராய தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக மூன்று கட்டங்களாக, அதனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையிலேயே, மூன்று கட்டங்களாக வழங்கப்படும் சம்பள அதிகரிப்பில், இரண்டு கட்டங்களை அடுத்த வருடம் முதல் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு தடையாக உள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபா – Trueceylon News (Tamil)

Rohan

நாடு முடக்கப்படுமா? – Trueceylon News (Tamil)

Rohan

95 ரூபா இலாபத்தில் நாட்டரிசி l எங்கே வாங்க முடியும்?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy