Tamil news Sri Lanka

வில் மற்றும் அம்பு தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு


நோர்வேயில் நபரொருவர் வில் மற்றும் அம்புகளை கொண்டு நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கு நகரான காங்ஸ்பேர்க் நகரில் அந்த நாட்டு நேரப்படி மாலை 6:13க்கு இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதுவொரு பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை அடுத்து மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 



Source link

Related posts

பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை (VIDEO)

Rohan

உலகத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் இரகசிய ஆவணங்கள் கசிந்தன – Trueceylon News (Tamil)

Rohan

7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு! இலங்கைக்கு பாதகமா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy