Tamil news Sri Lanka

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய துப்பாக்கி – Trueceylon News (Tamil)


மட்டக்களப்பு – கல்லடி திருச்செந்தூர் பகுதியில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மீன்களுடன் துப்பாக்கியொன்றும் கடலிலிருந்து அகப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியானது கல்லடி, திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு பின்னாலுள்ள கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் மீன்படி வலையிலேயே T56 ரக துப்பாக்கி அகப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரேனும் கடலில் எறிந்துவிட்டு சென்றிருக்கலாமென பொலிஸாா் சந்தேகிப்பதாக பொலிஸாா் தெரிவித்தனா்.



Source link

Related posts

தாய்லாந்து தமிழ் சங்கம் l மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் மற்றும் கொடைநாள் விழா (PHOTOS)

Rohan

NEWS JUST IN :- பொது போக்குவரத்து தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பு

Rohan

பால் மாவிற்கான புதிய விலை சற்றுமுன் அறிவிக்கப்பட்டது! – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy