Tamil news Sri Lanka

மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக எச்சரிக்கை


கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்காது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சில பகுதிகளில் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் தவிர்ப்பதாகவும் சுகாதார பழக்கவழங்கங்களை பேணாத பட்சத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் தற்போது அமுலில் உள்ள சுகாதார ஒழுங்கு விதிகள் குறித்து நாளை (15) வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணி கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.



Source link

Related posts

அசாத் சாலி விடுதலை! கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Rohan

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

Rohan

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy