Tamil news Sri Lanka

பெற்றோல், டீசல் விலை அதிகரித்தால், அதற்கு யார் காரணம்?


நிதி அமைச்சு நிவாரணமொன்றை வழங்காத பட்சத்தில், பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 20 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு Lanka IOC நிறுவனம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, பெற்றோலிய கூட்டுதாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

எனினும், இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு திறைசேரியினால் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம் – Trueceylon News (Tamil)

Rohan

பல ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

Rohan

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy