Tamil news Sri Lanka

நீண்ட இடைவெளிக்கு பின்னர், இந்திய மீனவர்கள் கைது


இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைகேணி பகுதியில் வைத்து, இரண்டு ட்ரோலர் படகுகளுடன் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் 3வது அலை பரவ ஆரம்பித்த கடந்த மார்ச் மாதம் முதல், அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.

அதன்பின்னரான காலத்தில் முதல் தடவையாகவே, இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இலங்கையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த 23 மீனவர்கள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

சுற்றிவளைப்புகள் தொடரும்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிரடி

Rohan

சேதமடைந்தது பாராளுமன்ற செங்கோல் – Trueceylon News (Tamil)

Rohan

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy