Tamil news Sri Lanka

யாழில் ஆலயத்திற்குள் பாதணியுடன் பொலிஸ் அதிகாரி சென்றாரா? − பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வழங்கிய பதில்


யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

குறித்த பொலிஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அதைவிடுத்து, ஆலயத்திற்குள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

பொலிஸார் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் மேல் சட்டையை கழற்ற கூடாது என்ற போதிலும், யாழ்ப்பாணம் − நல்லூர் ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழற்றுவதாக அவர் கூறினார்.

அது இந்து மதத்திற்கு பொலிஸார் வழங்கும் கெளரவம் எனக் கூறிய அவர், ஆலய நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் அதிகாரி சென்றமை கூட தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவித்தார்.

தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கெளரவத்துடன் மதிப்பார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?

Rohan

இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று (02) இலங்கைக்கு

Rohan

நுவரெலியா தீ விபத்து l மர்மத்திற்கு மத்தியில் ஒருவர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy