Tamil news Sri Lanka

சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்


பேஸ்லைன் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் வாகள நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதற்கிணங்க, கொழும்பிற்குள் நுழைவதற்கு கண்டி வீதியூடாக வருகை தரும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியை பயன்படுத்தாமல், நவலோக்க சுற்றுவட்டத்துடன் தொட்டகல சந்தி, டேல்ஸ் குமார மாவத்த மற்றும் புளுமென்டல் வீதியூடாக கொழும்பிற்கு வருகை தர முடியும்.

நீர்கொழும்பு வீதியூடாக வருகை தரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தையூடாக கொழும்பிற்குள் பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியின் இருமருங்கில் இருந்தும் வருகை தரும் வாகனங்கள், பலாமர சந்தி, லாயிட்ஸ் பிராட்வே வீதியூடாக வேல்ஸ் குமார மாவத்தைக்கு பயணிக்க முடியும்.



Source link

Related posts

குளியாப்பிட்டியில் புதிய கொரோனா கொத்தணி? அதிர்ச்சி தகவல்

Rohan

தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை வேண்டும்!

Rohan

சாரதி அனுமதி பத்திர எழுத்துமூல பரீட்சையில் திடீர் மாற்றம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy