Tamil news Sri Lanka

அதிபர்−ஆசிரியர் போராட்டம் இன்று முடிவுக்கு வருமா?


அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான நேற்றைய சந்திப்பில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து இன்று (13) கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

மூன்று கட்டங்களின் கீழ், சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஏற்கனவே அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்ட போதிலும், தற்போது இரண்டு கட்டங்களாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது சம்பள பிரச்சினையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஒரு கட்டமாகவும், எஞ்சிய 2 கட்டங்களை 2023ம் ஆண்டு ஜனவரியிலும் தீர்ப்பதாக பிரதமர் தலைமையிலான தரப்பினர், உறுதி வழங்கியுள்ளனர்.

எனினும், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு இணக்கம் வெளியிடாது, இன்றைய தினம் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானமொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)




Source link

Related posts

திருகோணமலை அனர்த்தம்! பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை அடித்து நொருக்கி மக்கள்

Rohan

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி! எதற்கு எல்லாம் அனுமதி தெரியுமா?

Rohan

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy