Tamil news Sri Lanka

2 – 18 வயது சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கு முதல் தடவையாக அனுமதி


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கொவெக்ஸின் தடுப்பூசியை, 2 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு செலுத்துவதற்கு முடியும் என அந்த நாட்டு விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.

Bharat Biotech நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை, 2 முதல் 18 வயது வரையான சிறார்களுக்கு செலுத்துவதற்கான செயற்பாட்டு ரீதியான பரிசோதனை அறிக்கையை, அந்த நாட்டு மத்திய ஓளடத தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசி தொடர்பிலான பரிசோதனைகள் கடந்த மூன்று மாத காலமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இந்த விசேட நிபுணர்கள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதற்கான அங்கீகாரத்தை இந்திய மத்திய ஓளடத தர கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கான அனுமதியை மத்திய ஓளடத தர கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்கும் பட்சத்தில், இந்தியாவில் அவசரகால அடிப்படையில் குழந்தைகளுக்கு கொவெக்ஸின் தடுப்பூசியை செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related posts

இலங்கையில் புதிய HEALTH APP? – Trueceylon News (Tamil)

Rohan

தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள்

Rohan

கிண்ணியாவில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படகு சேவை (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy