Tamil news Sri Lanka

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் காலப் பகுதி? − அரச தரப்பிலிருந்து வெளியான புதிய தகவல்


எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தத்தை ஏற்படுத்தும் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் G.L.பீரிஸ் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

நெனோ நைட்ரேஜன் திரவ உரம் இலங்கையை வந்தடைந்தது (PHOTOS)

Rohan

அத்துரெலிய ரதன தேரர், கட்சியிலிருந்து நீக்கம்

Rohan

ஒருவரை மிரட்டி 10 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy