Tamil news Sri Lanka

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு – Trueceylon News (Tamil)


2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ நேற்றைய தினம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்தும் நவம்பர் மாதம் 13ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஞாயிற்றுகிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்பின்னர், வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை நடைபெற்று, அன்றைய தினம் (25) மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம்

Rohan

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – Trueceylon News (Tamil)

Rohan

வடிவேலின் அதிரடி பிரவேசம் l “நாய் சேகர்” FIRST LOOK வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy