Tamil news Sri Lanka

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் l அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு?


இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் (11) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, பெற்றோலிய கூட்டுதாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினைகள் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவைக்கு தெளிவூட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, இந்த தருணத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும், எரிபொருளுக்கான நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு

Rohan

மலையகத்தை அடுத்து, வடக்கு l கிழக்கு செல்லும் இந்திய வெளிவிவகார செயலாளர்

Rohan

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy