Tamil news Sri Lanka

உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பு


உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரித்து, தற்போது ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக உள்ளது.

இதனால் மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 40 சதவீதம் நிலக்கரியை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கு தேவையான நிலக்கரி ஏற்கனவே, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளமையினால், அடுத்த ஆண்டு மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் ஒரு அலகு மின்சார உற்பத்திக்கான செலவு 4 ரூபாவினால் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Related posts

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதிக்கு சட்ட அனுமதி? – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டை முழுமையாக முன்னரை போன்று திறப்பது எப்போது? l அமைச்சர் வெளியிட்ட தகவல்

Rohan

மரக்கறிக்காகவும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy