Tamil news Sri Lanka

இலங்கையில் ஒரே இடத்தில் 65 பேரை கைது செய்த அரச புலனாய்வு அதிகாரிகள்


சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 65 பேர், திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுக வீதி மற்றும் ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 63 ஆண்களும், பெண் ஒருவரும், 4 வயதான சிறுமியொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

இந்த ஆட்கடத்தல் வர்த்தகத்தை நடத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

ருவன் விஜேவர்தன விடுத்த அதிரடி அறிவிப்பு l UNPக்குள் மீண்டும் பதவி மாற்றம் ஏற்படும் சாத்தியம்

Rohan

இலங்கையில் ஆரம்பமான டெல்பின் வசந்த காலம் (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

நாய் கடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஒரு மாதத்தில் உயிரிழந்த சோகம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy