Tamil news Sri Lanka

அரசியல் கட்சி உறுப்பினர்கள் கடும் மோதல் (VIDEO) – Trueceylon News (Tamil)


நாவலபிட்டி நகரில் இரண்டு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, அந்த பகுதியில் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைதானம் ஒன்று காணப்படுகின்ற நிலையில், அதனை அண்மித்த பகுதியில் நடைபயிற்சி பாதையொன்றை அமைக்க முயற்சித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்ததை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

200 லட்சம் ரூபா செலவில் நடைபயிற்சி பாதையொன்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக நாவலபிட்டி நகர சபையின் முன்னாள் தலைவர் சசங்க சம்பத் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்;.

மைதானத்தில் நடைபயிற்சி பாதை இருக்கின்ற நிலையிலேயே, இந்த பாதை அமைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

நிதி மோசடி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பி;டுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

RICE, கொத்து, தேநீரின் விலை அதிகரிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

டிசம்பர் இறுதி வரை கடும் கட்டுப்பாடுகள்? l சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

Rohan

மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy