Tamil news Sri Lanka

பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக பிரதி பொலிஸ் மாஅதிபர்களான கணவர், மனைவி


இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக ஒரே தடவையில் கணவர் மற்றும் மனைவி கடமையாற்றி வருகின்றனர்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் ஷிரானி செனவிரத்ன மற்றும் அவரது கணவரான பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த குணரத்ன ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

ஷிரானி செனவிரத்ன, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

ஷிரானி செனவிரத்ன 1987ம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டதுடன், அவரது கணவர் மஹிந்த குணரத்ன 1988ம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டுள்ளார்.

இருவரும் உப பொலிஸ் பரிசோதகர்களாகவே சேவையில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

NIB என அந்த காலப் பகுதியில் அழைக்கப்பட்ட இரகசிய தகவல் பொலிஸ் பிரிவிலேயே, இவர்கள் இருவரும் முதலில் கடமையாற்றியுள்ளனர்.

ஷிரானி செனவிரத்ன, பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்த்தப்படும் வரை, அவர் அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றியுள்ளார்.

மஹிந்த குணரத்ன, சிறிது காலம் அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றியிருந்ததுடன், தற்போது அவர் களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வருகின்றார்.

தேசிய பாதுகாப்பு தகவல் அலுவலகத்தில் கடமையாற்றிய தருணத்திலேயே, இருவரும் அறிமுகமாகி, திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டுள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – Trueceylon News (Tamil)

Rohan

பிரித்தானியா செல்லும் கோட்டா! சந்திக்க மறுக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள்

Rohan

பாகிஸ்தான் இலங்கையர் கொலை l நூற்றுக்கணக்கானோர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy