Tamil news Sri Lanka

உலகின் முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக சாதனை படைத்தது இலங்கை!!


தடுப்பூசி போடுவதில் உலகின் முதல் நான்கு நாடுகளில் இப்போது இலங்கை ஒன்றாகும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதற்கிடையில், 20 – 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் நேற்று (10) 720 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தற்போது 13,331 ஆக உள்ளது.

கண்டியில் நேற்று (10) நடைபெற்ற விழாவில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரானாவால் உயிரிழந்தவர்களில் சுமார் 74 சதவீதம் பேர் எந்த தடுப்பூசியும் பெறாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் அளவுகள் 46,639 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு

Rohan

வெளிநாட்டிலிருந்து வந்த கணவரின் தாக்குதலில் உயிரிழந்த மனைவி

Rohan

இன்று (22) வழமைக்கு திரும்பும் பாடசாலைகள் l பாடசாலைகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் என்ன செய்வது?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy