Tamil news Sri Lanka

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு


லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 5KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 503 ரூபாவால் அதிகரிக்க நிறுவனம் தீர்மானம் எட்டியுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு 5 KG சிலிண்டரின் புதிய விலை 1,101 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2.5KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 520 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12.5KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,257 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5KG லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

”எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தை நாளை (16) நடத்த இடமளிக்க மாட்டேன்”

Rohan

அரசாங்கத்திற்குள் அதிகரிக்கும் பதற்றம்! விமல், மஹிந்த அவசர கூட்டம்

Rohan

வழிபாட்டுத்தலங்கள் மூலம் மீண்டும் கொத்தணி உருவாகும் அபாயம்! ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy