Tamil news Sri Lanka

மாகாண சபை எப்போது? – பழைய முறையில் நடத்த திட்டம்?


மாகாண சபைத் தேர்தலை பழைய முறையின் கீழ் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து, அதனை நிறைவேற்றி, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் சட்ட திருத்தமொன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் விவாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சட்டத்திருத்த சட்டமூலத்தை கொண்டு வர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் சட்ட திருத்தத்தை மேற்கொண்டு, ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகின்றது.

பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

அனர்த்தங்களில் இருவர் பலி l ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

சபைக்குள் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் – Trueceylon News (Tamil)

Rohan

சர்வதேச பாடசாலையொன்றில் 17 மாணவர்களுக்கு கொரோனா

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy