Tamil news Sri Lanka

நாடு முழுமையாக திறக்கும் திகதி வெளியானது – Trueceylon News (Tamil)


நாட்டை எதிர்வரும் 21ம் திகதி முழுமையாக திறப்பதாக தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்குள் பஸ் சேவை வழமை போன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் 21ம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

பரீட்சை சுட்டெண்ணை மறந்த மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Rohan

பால்மா, கேஸ், கோதுமை மா, சீமெந்து விலைகள்? − அமைச்சரவை முடிவு?

Rohan

இலங்கையில் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy