Tamil news Sri Lanka

நாடளாவிய ரீதியில் பலத்த மழை பெய்யும்! – Trueceylon News (Tamil)


மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



Source link

Related posts

உலகிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டுபிடிக்ப்பட்டார்! மர்ம நோய்க்கு கிடைத்தது பதில்

Rohan

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – சிலர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அறிவிப்பு

Rohan

புத்தாண்டுக்குள் ஏற்படப்போகும் ஆபத்து! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy