Tamil news Sri Lanka

தன் மீது மக்கள் கொண்ட வெறுப்பை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி – இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றும் ஒரு உறுதிமொழி (VIDEO)


நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையை, தான் வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி, நியாயப்படுத்த போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணி வளாகத்தில் இன்று (10) இடம்பெற்ற இராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த 2 வருடங்களாக போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ள அவர், அதற்காக தான் நியாயம் கூறிக்கொண்டிருக்க போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலும், மக்களுக்காக தாம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்..

எனினும், தன் மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என மக்களுக்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தான் மக்களின் வெறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அவர், அமைச்சர்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கொவிட் தொற்றை கட்டுப்படுத்தி, புதிய இயல்பு நிலைமையில் நாட்டை திறந்து, புதிய உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது உறுதியளித்துள்ளார்.

தான் ஏற்கனவே உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பை அடுத்த வருடத்திற்குள் கொண்டு வருவதற்கும், புதிய தேர்தல் முறைமையொன்றை அடுத்த வருடத்திற்குள் கொண்டு வருவதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வாக்குறுதியை இந்த வருட இறுதிக்குள் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்தார். (TrueCeylon)

 

ஜனாதிபதியின் முழுமையான உரையின் தமிழாக்கம்



Source link

Related posts

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு! – Trueceylon News (Tamil)

Rohan

அதிவுயர் ஆபத்தான கொவிட் ஒமிக்ரோன் l WHO பெயர் சூட்டியது

Rohan

BREKING NEWS : பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy