Tamil news Sri Lanka

கல்வி கற்கச் சென்ற சிறுமி 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு! தம்பதிகள் தப்பி ஓட்டம்


தம்புள்ளை – கலோகஹஹெல பகுதியில் கல்வி கற்கச் சென்ற 14 வயது சிறுமி 4 நாட்களுக்குப்பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 6ஆம் திகதி அருகில் உள்ள வீடொன்றிற்கு கற்றல் செயற்பாடுகளுக்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக வீடு திரும்பாததையடுத்து சிறுமியின் தாய் தம்புள்ளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர், சிறுமி கற்றல் செயற்பாடுகளுக்காகச் சென்ற வீட்டை சோதனையிட்டபோது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வீட்டிலிருந்த தம்பதியினர் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற தம்பதியினரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



Source link

Related posts

ஒமிக்ரோன் நுழைந்த 10ற்கும் அதிகமான நாடுகளின் பட்டியல்

Rohan

மதுபானசாலைகள் பூட்டு – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்டுள்ள நிலை!!!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy