Tamil news Sri Lanka

அதிபர்−ஆசிரியர்களுடனான பிரதமரின் சந்திப்பு, ஒத்தி வைப்பு l 91வது நாளாக தொடரும் போராட்டம்


ஆசிரியர் − அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் இன்று (11) நடைபெறவிருந்த கலந்துரையாடல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பிரதமர் அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிட்டார்.

பிரதமருடன் கலந்துரையாடல் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி, அதிபர் − ஆசிரியர் போராட்டம் 91வது நாளாக தொடர்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தமது சம்பள முரண்பாடு பிரச்சினை இதுவரை முடிவடையவில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார் – Trueceylon News (Tamil)

Rohan

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்!

Rohan

தமிழர் பிரதேசத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – பஷில் சபையில் வெளியிட்ட கருத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy