Tamil news Sri Lanka

போத்தலில் சிறுநீர் கழிக்கும் இலங்கை MP – Trueceylon News (Tamil)


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், நாளாந்தம் மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தலிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

5 மணிக்கு பின்னர், ​போத்தலிலே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சிறுநீர் கழிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் பதில்

கடந்த காலங்களில் தாங்களும் இவ்வாறே சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு பின்னர் போத்தல்களிலேயே சிறுநீர் கழித்ததாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

பாண்டோரா விசாரணை இலங்கையில் ஆரம்பம் – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கை கடற்படையின் அதிவேக படகுடன் மோதிய இந்திய மீனவரின் படகு! இருவர் மீட்பு – ஒருவர் மாயம்

Rohan

IOC நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy