Tamil news Sri Lanka

டொலரில் வரி செலுத்தி, வாகனம் இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் தீர்மானமா?


வாகன இறக்குமதியின் போது, அறவிடப்படும் வரித் தொகையை டொலரில் செலுத்த இணக்கம் தெரிவிப்போருக்கு, வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அனுமதி வழங்கும் திட்டமொன்று குறித்து மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று (27) கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் குறித்து, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும பதில் வழங்கியிருந்தார்.

குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எட்டவில்லை என அவர் கூறினார்.

வாகன இறக்குமதி தொடர்பிலான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதைவிடுத்து, வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார். (TrueCeylon)

 

தொடர்புடைய செய்தியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்



Source link

Related posts

T20 உலகக் கிண்ண போட்டி ஆரம்பத்தில் உயிரிழந்த முக்கிய நபர்

Rohan

கொவிட் மருந்து வில்லைக்கு, முதல் தடவையாக அனுமதி

Rohan

கொவிட் பரவல் குறித்து இராணுவ தளபதி வெளியிடும் அச்சம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy