Tamil news Sri Lanka

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெளிவரவுள்ள அறிவிப்பு


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி எதிர்வரும் இரு தினங்களுக்குள் கட்டாயம் அறிவிப்பார் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் நேற்று (27) வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை சுமார் 1000 வரை குறைக்க முடிந்துள்ளதாகவும், கொவிட் உயிரிழப்புக்களை 50 தொடக்கம் 75 வரை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி எதிர்வரும் இரு தினங்களுக்குள் கட்டாயம் அறிவிப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டியை தயாரிக்குமாறு ஜனாதிபதி, சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் – Trueceylon News (Tamil)

Rohan

T20 WORLD CUP :- இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தின் முக்கிய வீரர் வெளியில்

Rohan

Whatsapp எதிர்வரும் தினங்களில் மாறும் விதம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy