Tamil news Sri Lanka

ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அதிரடி அழைப்பு l அரசாங்கத்தின் தீர்மானம்?


வெள்ளை பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறித்து, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (28) கேள்வி எழுப்பப்பட்டது.

ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டமை குறித்து, தாம் கவலை அடைவதாக ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக அழைக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைக்க போவதில்லை என அமைச்சர் சரத் வீரசேகர உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி வெளியிடுகின்றமைக்காக ஊடகவியலாளர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை தொடர்பில் கவலை அடைவதாகவும் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார். (TrueCeylon)



Source link

Related posts

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விசேட செய்தி

Rohan

இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயினால் முதலாவது மரணம் பதிவானது

Rohan

“அனுமதி இல்லை” சீன தூதரக அதிகாரிகளுக்கு இலங்கை அதிரடி அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy