Tamil news Sri Lanka

அரசாங்கத்திலிருந்து பங்காளிக் கட்சிகள் தாராளமாக வெளியேறலாம் – பிரதமர் அதிரடி


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியேற நினைக்கும் கட்சிகளை பலவந்தமாக தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்த பிரதமர்,

யார் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் தமது அரசாங்கம் நிலைத்து நிற்குமெனவும் குறிப்பிட்டார்.

சிங்கள ஊடமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டுள்ளன. எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் தற்போது அரசாங்கத்தின் இடத்தில் செயற்பட்டிருந்தால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கி சென்றிருக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.



Source link

Related posts

பாடசாலைகள் அரம்பிக்கப்படும் போது சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம்!!

Rohan

நாளை முதல் ஒரு மணிநேரம் மின்சாரம் தடை – Trueceylon News (Tamil)

Rohan

டிசம்பர் இறுதி வரை கடும் கட்டுப்பாடுகள்? l சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy